தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பகல்நேர வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கோடை வெப்பத்தை சமாளிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.
அதன் படி, மக்கள் தேவையின்றி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதையும் வெயிலில் பணிபுரிவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், திறந்த வெளியில் வேலைப்பார்ப்பவர்கள் குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காபி போன்ற பானங்களை தவிர்த்து, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், இறுக்கமற்ற மற்றும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லஸ்சி, மோர், எலுமிச்சை சாறு போன்றவற்றையும் அருந்தி வெயிலின் தாக்கத்தை மக்கள் தணித்துக் கொள்ளுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.