அசாம் மாநிலம் கவுகாத்தியில், ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
சுமார் 14 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்க கவுகாத்தி சென்ற பிரதமர் மோடியை, அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா வரவேற்றார்.
கடந்த 2017-ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது அதனை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
தொடர்ந்து, நல்பாரி, நாகோன் மற்றும் கோக்ரஜார் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட 3 மருத்துவக்கல்லூரிகளை காணொலி வாயிலாக திறந்து வைத்த பிரதமர், 546 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள அசாம் ஹெல்த்கேர் நிறுவன கட்டுமானத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
தொடர்ந்து பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், இம்மாநிலங்களின் வளர்ச்சி குறித்து தான் பேசினால், கடந்த கால ஆட்சியாளர்கள் அசெளகரியமாக உணர்வதாகவும் விமர்சித்தார்.