காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவலையடுத்து பஞ்சாப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் 18ம் தேதி தப்பிச் சென்ற அம்ரித்பாலை போலீசாரால் நெருங்க முடியவில்லை. தலைப்பாகை இல்லாமல் சாதாரண உடையில் கூட்டத்துடன் கூட்டமாக தப்பிச் செல்வதாக அம்ரித்பாலின் கூட்டாளிகள் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப், டெல்லி, ஹரியானா போன்ற இடங்களில் தேடிக் கிடைக்காத நிலையில் இப்போது ராஜஸ்தானில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அம்ரித்பாலின் படம் போட்ட போஸ்டர்கள் முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளனர். தகவல் சொல்பவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.