காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இங்கிலாந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்குள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், ரிஷி சுனக் உடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கும் இந்திய பொருளாதாரக் குற்றவாளிகளை நாடு கடத்தும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
இந்திய வம்சாளியைச் சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பைசாகி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.