வந்தே பாரத்தைப் போல, டிசம்பர் மாதம் முதல் 'வந்தே மெட்ரோ' ரயில்கள் ஓடத் தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வந்தே பாரத்தை விட வந்தே மெட்ரோ ரயில் வேறுபட்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
100 கிலோமீட்டருக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையில் துரிதமான கால இடைவெளியில் இவை இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே துறை மூலம் ஏற்றுமதி அதிகரித்து வருவதால், பிரத்யேக ரயில் தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.