உலக நாடுகள் கடன் சுமைகளில் இருந்து மீள, உரிய நேரத்தில் கடன் வட்டி குறைப்பு, திருப்பி செலுத்தும் காலம் நீட்டிப்பு போன்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டையொட்டி, வாஷிங்டனில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், வறுமை ஒழிப்பு பணிகளில், கடன் சுமைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார்.
உலகளவில் அதிகரித்துவரும் கடன் சுமைகளை எதிர்கொள்ள, ஜி20 அமைப்பிற்கு தலைமையேற்றுள்ள இந்தியா உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த செயல்திட்டத்தை விரிவுபடுத்த, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூடுதல் பங்களிப்பு அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்.