இந்தியாவில் கோவிட் பரவி வருவதால் பல்வேறு மாநில அரசுகள் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
கடந்த வாரத்திலிருந்து கோவிட் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், டெல்லி அரசு காய்ச்சல் சளி போன்ற ஃப்ளூ பாதிப்புடைய மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் மீண்டும் கோவிட் வேகமாகப் பரவும் என்று சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் எச்சரித்துள்ளார்.
இதே போல் ஹரியானா அரசு பொது இடங்களில் முக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது.ஹரியானாவுக்கு வரும் பயணிகளிடம் பாதிப்புகள் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவமனைகளில் கோவிட் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் முக்ககவசம் அணிய வேண்டும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் நாள்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.