ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான போலி நுழைவுச்சீட்டுகளை அச்சடித்து ஊர் ஊராக மேட்ச் நடைபெறும் இடங்களில் இருமடங்கு மும்மடங்கு விலைக்கு உண்மையான டிக்கட்டுகளுடன்போலி டிக்கட்டுகளை கலந்து விற்று வந்த கும்பலை டெல்லி போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
இவ்வழக்கில் மும்பையைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, டெல்லி- மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் 80 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.