செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உயிர் கொடுத்த தோழனுக்கு நட்பாய் மாறிய கொக்கு.. சட்டத்தால் பிரிப்பு.. நண்பனை கண்டதும் நடனமாடிய கொக்கு..!

Apr 12, 2023 09:01:01 PM

அன்பும், நட்பும் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் தன்னை காயத்திலிருந்து மீட்ட இளைஞரை சரணாலயத்தில் பார்த்ததும் சாரஸ் கொக்கு, ஆனந்தத்தில் துள்ளிக்குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது..

உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முகமது ஆரிப்.
கடந்தாண்டு தனது வயலுக்குச் சென்ற போது சாரஸ் எனப்படும் பெரிய வகை கொக்கு ஒன்று காலில் அடிபட்டு பறக்க முடியாமல் இருப்பதை கண்டார். உடனடியாக, அதனை தனது வீட்டிற்கு எடுத்து வந்து காலில் கட்டுப்போட்டு உணவளித்தார்.

கால் காயம் சரியான பிறகு ஆரிப்பை விட்டு பிரிய மறுத்த அந்த கொக்கு அவருடனேயே பயணிக்க ஆரம்பித்தது. ஆரிப் டூவீலரில் சென்றால் அவரை பின்தொடர்ந்து பறப்பது, வாக்கிங் சென்றால் அவருடனேயே நடப்பது என்று ஒரு தோழனாகவே மாறியது கொக்கு. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், சாரஸ் கொக்கு இனம் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறிய வனத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கொக்கை கான்பூர் வனவிலங்கு சரணலாயத்தில் சேர்த்தனர்.

நண்பனை பிரிந்த சோகத்தில் இருந்த கொக்கு சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததால், கொக்கின் நட்பும் பிரிவும் உத்தரப்பிரதேசத்தில் அரசியல் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், சரணலாயத்திற்குச் சென்ற ஆரிப்பை பார்த்த்தும் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த கொக்கு ஆனந்த நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த வீடியோவை பாஜக எம்.பி வருண்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கொக்கை ஆரிப்புடன் சேர்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார்.

யானைக்குட்டிக்கும் மனிதர்களுக்குமான நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படமான தி எலிபன்ட் விஸ்பரஸ் ஆஸ்கர் விருதை பெற்று உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், மனிதனுடனான கொக்கின் நட்பும் கவனத்தை ஈர்த்து, அன்பு செலுத்துவதற்கு அன்பைத் தவிர வேறெந்த காரணமும் தேவையில்லை என்பதை உணர்த்தியுள்ளது.


Advertisement
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது
திருப்பதியில் வி.ஐ.பி.தரிசன டிக்கெட் வழங்கும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் மையம் திறப்பு
இரவு முதல் தொடர் மழை - பல இடங்களில் பெருக்கெடுத்த தண்ணீர்..
வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகாரம் பெற வேண்டும் - பிரதமர் மோடி
பா.ஜ.க.வில் உள்ள கறைபடிந்த நபர்கள் மீது நடவடிக்கை - நிதின் கட்கரி வலியுறுத்தல்
பழங்குடியினர் இடையே மோதலை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கொள்கை - மோடி
பூட்டிய வீட்டின் தகரகூரையை துளைத்துக் கொண்டு வந்த தோட்டாவை போலீஸில் ஒப்படைப்பு..
சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் வசதி : பி.எஸ்.என்.எல் புதிய திட்டம்..
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 3ஆவது நாளாக நீடிக்கும் அமளி..

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement