தெலுங்கானாவில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் ஆர்.சி.பி மற்றும் எல்.எஸ்.ஜி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின்போது ஹைதராபாத்தில் பெருமளவில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், புறநகர் பகுதியில் சாய் அனுராக் காலனியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டபோது அங்கு ஐ.பி.எல் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக அங்கிருந்த 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 60 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சூதாட்டம் நடத்த பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள், டி.வி ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.
முக்கிய நபரான விஜயவாடாவை சேர்ந்த பாண்டு தலைமறைவாகிவிட்ட நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.