ஒடிசாவில், உயர்ந்துவரும் வெப்பநிலையை கருத்திற்கொண்டு அம்மாநில அரசு வருகிற ஏப்ரல் 16 -ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.
அதிக வெப்பச்சலனம் காரணமாக 10 ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளையும், அங்கன்வாடி மையங்களையும் ஏப்ரல் 16 ந் தேதி வரை மூட ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து திரும்பியவுடன் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தார்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதிசெய்யவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.