தமிழக இளைஞர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், தமிழகத்தில் அதிக இளைஞர்களால் ஈர்க்கப்படும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-இல், தமிழகத்தை சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெற்றுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும், ஒருவரை கூட அந்த அணி தேர்வு செய்யவில்லை என்றும், தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து, மக்களிடம் பெரும் வர்த்தக லாபத்தை அடைவதாகவும் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.