விமானப் பயணிகள் நடத்தை தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குனரகமான டிஜிசிஏ அனைத்து விமான நிறுவனங்களுக்கும் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
விமானிகள், விமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அநாகரீகமாக நடந்துக் கொள்ளும் பயணிகளை கையாள்வது தொடர்பாக சில அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விமானம் வானில் பறக்கும் போது மிகுந்த கட்டுப்பாடும் ஒழுங்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரம்பு மீறும் பயணிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.