தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வேட்பாளரை தேர்தலில் நிற்க தடை விதிக்கக்கோரும் பொதுநல மனுவுக்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தால் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றவாளி இல்லை என்ற குற்றவியல் சட்டத்தின் அடிப்படையின்படி தடைகோரும் மனு ஏற்கப்படக்கூடாது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு ஒரு வேட்பாளரும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கவும் மேல்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இப்பிரச்சினையில் வேட்பாளரை தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு சட்டக் கமிஷன் அளித்த பரிந்துரையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தீவிரமான குற்றங்கள் எவை என்று மத்தியஅரசு பதிலளிக்க அவகாசம் அளித்து விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.