சீனாவின் உளவு பலூன்கள் விவகாரம் குறித்து இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தியிருப்பதாக அமெரிக்க விமானப்படை கமாண்டர் கென்னத் வில்ஸ்பாச் தெரிவித்துள்ளார்.
தென் கலிபோர்னியாவில் சீனாவின் உளவு பலூன் அமெரிக்க விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் விமானப்படைத் தளபதிகளுடன் சுருக்கமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கென்னத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வான் சட்டங்களை மதிக்காமல் எந்த ஒரு நாட்டின் இறையாண்மையிலும் குறுக்கிடும் மற்றொரு நாடு எங்கள் கவனத்துக்கு ஆளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதை குறிப்பிட்ட அமெரிக்க விமானப்படை அதிகாரி அவை மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தைகள் என்றும் கூறினார்.