கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட முக்கியக் குற்றவாளியான KT Ramees கொச்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பார்சலில் வைக்கப்பட்டிருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ், சரித் பிஎஸ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கேரள அரசின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அரசு அதிகாரிகள் துணையோடு 167 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாக வழக்கு விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் ரமீசிடம் நேற்று விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.