பாகிஸ்தானின் ரவி ஆற்று நீர் உள்பட 155 நாடுகளின் நதிகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீரால் வரும் 23ம் தேதி ராமபிரான் சிலைக்கு ஜல அபிசேகம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
பாகிஸ்தானின் ரவி நதியில் இருந்து கலசத்தில் ரவி நீரைப் பெற்றுக் கொண்ட இந்துக்கள் மூலமாக அது துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுஅங்கிருந்து டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோன்று மொத்தம் 155 நாடுகளின் நதிகளில் இருந்தும் புனித நீர் கலசத்தில் சேமிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது