சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலமான எரிவாயு விநியோகம் போன்றவற்றுக்கு விலை உச்சவரம்பு விதிக்கும் புதிய கொள்கைக்கு.
பிரதமர் மோடி தலைமையில், நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நடைமுறையான ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் கட்டணங்கள் முடிவு செய்யப்படும், என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
இதன் மூலம் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் சி.என்.ஜி. விலை 10 சதவீதம் வரை குறையும் என்று கூறப்படுகிறது