அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, டெல்லி ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பூடான் மன்னர் மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரதமரை சந்தித்த அவர் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவத்ரா, நீர் மின்சார திட்டங்கள், வர்த்தகம், விமானம், ரயில் சேவை உள்ளிட்டவை குறித்தும், ஸ்டார்ட் அப், கல்வி,விண்வெளி துறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் பூடான் மன்னர் சந்தித்து பேசினார்.