சிக்கிமில் இன்று நேரிட்ட பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் பலியான நிலையில், மேலும் 80க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நாதுலா பகுதியை காங்டாக் பகுதியோடு இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில் பதினைந்தாவது மைலில் இன்று மதியம் 12 மணியளவில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 30 பேர் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் பதிமூன்றாவது மைல் வரை செல்ல மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில், அதையும் தாண்டி சென்றதால், பனிச்சரிவில் சிக்கியதாக கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.