காங்கிரஸ் எம்பி ராகுல் தகுதி நீக்கம் குறித்து கருத்துத் தெரிவித்தது மேற்கத்திய நாடுகளின் மோசமான செயல் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார்.
பெங்களூருவில் பேசிய அவர், மேற்குலகில் நீண்ட காலமாக பிறரைப் பற்றி கருத்து சொல்லும் தீய பழக்கம் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது தங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாகவும் ஜெய்சங்கர் விமர்சித்தார்.