மேற்கு வங்கத்தின் பர்தமான் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ராஜூ ஜா என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துர்காபுரை சேர்ந்த தொழிலதிபரான ராஜூ ஜா தமது சகாக்களுடன் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.ராஜூ ஜா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காரில் இருந்த மற்ற இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முந்தைய மார்க்சிஸ்ட் ஆட்சிக் காலத்தில் ராஜூ ஜா சட்டவிரோதமான நிலக்கரி வர்த்தகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் வந்த திரிணாமூல் ஆட்சியில் அவர்மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.