தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மும்பை வந்த 6E-1052 என்ற விமானத்தில் ஸ்வீடனை சேர்ந்த ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளார். விமானப் பயணத்தின்போது அசைவ உணவு கேட்ட ஜோனஸ்க்கு அசைவ உணவை வழங்கிய பணிப்பெண், கட்டணம் செலுத்துவதற்காக ஏடிஎம் கார்டை கேட்டுள்ளார்.
அப்போது பணிப்பெண்ணின் கையை அவர் பிடித்து இழுத்ததுடன், சில்மிஷம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் அவரை கைது செய்த நிலையில், அந்தேரி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.