ரஷ்யாவின் வெளிநாட்டு கொள்கையின் படி இந்தியாவும் சீனாவும் முக்கியமான கூட்டு நாடுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக வெளியான 42 பக்கம் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்குப் பின்னரும் இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுடன் ராணுவ ரீதியாகவும் அரசு முறையாகவும் உறவுகளை தொடர்ந்து வருகின்றன.
அரசியலின் 5 பெரும் தூண்களாகக் கருதப்படும் பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, தீவிரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் உறவுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பு நல்கி வருகின.