கோவிட் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய உருமாறிய கோவிட் XBB.1.16 மிதமான பாதிப்பையே கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென குர்கானில் உள்ள மெதாந்தா மருத்துவமனையின் தலைவரான டாக்டர் அரவிந்த் குமார் வலியுறுத்தியுள்ளார்.
பரிசோதனைகள் அதிகரித்துள்ளதால் பாதிப்புகளும் அதிகளவில் தெரிய வருவதாகக் கூறிய அவர், பாதிப்புகள் தீவிரம் குறைந்தவையாக காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.