மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடைபெற்ற ராமநவமி பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து, அங்கு 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில பாஜக தலைவர் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு நிலவரம் குறித்து கொண்டு கேட்டறிந்தார்.
ஹவுராவில் வன்முறை தலைவிரித்தாடுவதாகவும் போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும் பாஜக வினர் புகார் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கு சீர் குலைத்து விட்டதால் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.