வங்கி கணக்கில் இருந்து நேரடியாக UPI வர்த்தக பண பரிமாற்றம் செய்யும் போது எவ்வித கட்டணமும் வசூலிக்கபடாதென்றும், Wallet-ல் இருந்து வணிக நிறுவன வங்கி கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்யும்போது மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டுமென்று தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா விளக்கமளித்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான UPI வர்த்தக பண பரிமாற்றம் செய்யும்போது 0.5 சதவீதத்தில் இருந்து 1.1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்க தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பரிந்துரை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு,
வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் UPI பரிவர்த்தனை இலவசம் என்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இடையேயான வங்கி பண பரிவர்த்தனைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.