கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் மாதம் 13ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் குறிப்பிட்டார்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்படும் என்று கூறிய ராஜீவ் குமார், கர்நாடக தேர்தலில் 5 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 579 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அவர்களில் 9 லட்சத்து 17 ஆயிரம் பேர் முதல்முறையாக வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.