தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங், கடந்த 21ந் தேதி டெல்லி வீதிகளில் நடமாடும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
தலைப்பாகை இல்லாமல் டெனிம் கோட்டு அணிந்து முகக் கவசத்தால் முகம் மறைத்து நடமாடும் நபர் அம்ரித்பால் தான் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.தமது பாஸ்போர்ட் அல்லது போலி பாஸ்போர்ட் மூலமாக நேபாளம் வழியாக மூன்றாவது நாட்டுக்கு தப்பிச் செல்ல அம்ரித்பால் சிங் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவலையடுத்து நேபாள அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.