சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் சாலைகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் 3ம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சாலைகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.