கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
மாநில அரசு புதிதாக அறிவித்த இடஒதுக்கீட்டில் தங்கள் சமூகத்திற்கான பங்கு குறைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பஞ்சாரா சமூகத்தினர், ஷிகாரிபுராவில் போராட்டம் நடத்தினர்.
எடியூரப்பா இல்லம் அமைந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கலைக்க முயன்ற போலீசார் தடியடி நடத்தினர்.
இதனையடுத்து, போலீசார் மீதும் எடியூரப்பா வீட்டின் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த ஷிகாரிபுராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.