மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த மாநில அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு பிரிவில், சிறுபான்மையினரை சேர்க்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் பிதார் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பிரிவினை அரசியலை மையப்படுத்தி, சிறுபான்மையினருக்கு முந்தைய காங்கிரஸ் அரசு இடஒதுக்கீடு வழங்கியதால், பாஜக அதனை ரத்து செய்ததாக கூறினார். காங்கிரசின் வாக்கு வங்கி பேராசையால், சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை கூட, அக்கட்சியினர் நினைவுகூருவதில்லை என்றும் அவர் சாடினார்.