எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பதவியை தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)- ஐ எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்களை தன்னிச்சையாக தகுதிநீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 8(3), அதிகாரத்தை மீறிய ஷரத்து என்றும், இது எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பேச்சு சுதந்திரத்தை குறைப்பதுடன், அவர்களின் கடமையை தடுக்கும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2013-ல் உச்சநீதிமன்றத்தால் சட்டப்பிரிவு 8(4) ரத்து செய்யப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டார்.Q