பஞ்சாபில் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித் பால் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்டுடன் அவரை போலீசார் தேடி வரும் நிலையில் 5 நாட்களாக சிக்காத அம்ரித் பால், வெவ்வேறு ஆடைகளில் மற்றும் மாறு வேடங்களில் மெர்சிடிஸ் கார் முதல் பைக், ஆட்டோ ரிக்சா போன்ற வாகனங்களில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
போலீசார் விரட்டிய போது ஜலந்தரில் உள்ள குருதுவாராவிற்கு சென்று அம்ரித்பால் சிங் உடைகளை மாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
சுமார் 40 நிமிடங்கள் குருதுவாராவில் இருந்த பின்னர் இரண்டு பைக்குகளில் பாதுகாப்புக்காக வந்த நான்கு பேருடன் அம்ரித்பால் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.