இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டான எல்விஎம்3 ராக்கெட் வருகிற 26ந்தேதி அன்று 2வது முறையாக வணிகப் பயணத்தை மேற்கொள்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் 26ந்தேதி அன்று காலை 9 மணி அளவில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மற்றும் தேதியையும் இதுதொடர்பான படங்களையும் இஸ்ரோ டுவீட் செய்துள்ளது. ஒன்வெப் நிறுவனத்தின் 5ஆயிரத்து 805 எடையுள்ள 36 செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்லும் என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் 23ந்தேதி இஸ்ரோ வணிக ரீதியான ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.