மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் அமைப்பான பிரவாசி லீகல் செல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது அதில் சில உயர்நீதிமன்றங்கள் மட்டுமே ஆர்டிஐ இணையதளங்களை உருவாக்கி உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆர்டிஐ விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதிகள் இல்லாததால், தகவல்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டனர்.