இந்தியாவின் பால் பதப்படுத்தும் திறன் ஒரு நாளைக்கு சுமார் 12 கோடியே 60 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாகவும், உலகளவில் இதுவே அதிகபட்சமாகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில், இந்திய பால்வளத்துறை சார்பில் நடைபெற்ற 49வது பால் தொழில் கருத்தரங்கில் பங்கேற்ற அமித்ஷா, இந்தியாவின் மக்கள்தொகை கடந்த 52 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில், பால் உற்பத்தியை பால்வளத்துறை பத்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்தியப் பொருளாதாரத்தில் பால் தொழில்துறை பத்து லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பங்களிப்பு செய்து முக்கிய அங்கமாக விளங்குவதாகவும், இத்தொழிலில் சுமார் 45 கோடி மக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார்.