மிகக் குறுகிய தூர இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணையின் சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டு உள்ளது.
தரையில் நிலைநிறுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து மிகக் குறுகிய தொலைவு வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை, வானில் அதிவேகத்தில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா மிதவை இலக்கை துல்லியமாகத் தாக்கியது. ஒடிஸாவின் சந்திப்பூர் கடற்கரையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ.வின் பல்வேறு ஆய்வகங்களுடன் இணைந்து ஹைதராபாதில் உள்ள இமாரத் ஆராய்ச்சி மையம் இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளது.