கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா எழுதிய கடிதத்தில், குடிநீர் பம்புகளை பழுது நீக்குதல், வனப்பகுதியில் தீயணைப்பு முன்னேற்பாடுகள், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்தல் கோடைக் கால நோய்களுக்கான மருந்துகளை கைவசம் வைத்திருத்தல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.