7 தேசிய கட்சிகளின் 66 சதவீத வருமானம் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து திரட்டப்பட்டவை என்பது ஆய்வறிக்கை மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், 2 இடதுசாரிக் கட்சிகள், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு 2021-2022ம் ஆண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து 2,172 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும், இது மொத்த வருமானத்தில் 66 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடை தொடர்பான சட்டவிதிகளில் 20 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை கணக்கில் தெரிவிக்க வேண்டியதில்லை என கூற்பட்டுள்ளது. அதுபோலவே 66 சதவீத தொகை திரட்டப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது