மகளிர் இடஒதுக்கீடு கோரும் தார்மீக உரிமை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகளும் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதாவிற்கு இல்லை என பாஜக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி கவிதா நேற்று டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய், பி.ஆர்.எஸ் அரசு எந்த துறையிலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை எனவும், பி.ஆர்.எஸ்-ல் கவிதாவை தவிர வேறு எந்தப் பெண்களுக்கும் பங்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
தெலுங்கானா அரசு மற்றும் பி.ஆர்.எஸ் கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஏன் பின்பற்றவில்லை எனக் கேள்வி எழுப்பிய சஞ்சய், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெண்களுக்கு அனைத்து உயர் பொறுப்புகளிலும் முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.