வழக்கொழிந்த 65 சட்டங்களை நீக்குவதற்கு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு புதிதாக மசோதா கொண்டு வர இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற 23வது காமன்வெல்த் சட்ட கருத்தரங்கில் பேசிய அவர், வழக்கில் இல்லாத சட்டங்களுக்கு முடிவு கட்டும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற 1,486 வழக்கொழிந்த சட்டங்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
நீதித்துறையை காகித பயன்பாடு இல்லாத துறையாக மாற்றும் நோக்கில், 3வது கட்ட இ நீதிமன்றங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.