வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில், காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.