டெல்லியில் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டுகளில் வருவாய் இழப்பு, மது விற்பனையாளர்களுக்கு தேவையற்ற சலுகை மற்றும் ஆதாயம் அளித்தது போன்ற புகார்களை சிபிஐ பதிவு செய்துள்ளது.
சுமார் 143 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாளர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் மது விற்பனை உரிமத்துக்கான கட்டணங்கள் திருப்பித் தரப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு செல்போன்களைப் பயன்படுத்தி ஆதாரங்களாக அவை பயன்படுவதைத் தடுக்க சிசோடியா அழித்ததாகவும் அவ்வகையில் ஒருகோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் அழிக்கப்பட்டதாகவும் மணிஷ் சிசோடியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.