மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ முன் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.
கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிஐ கூறிய நிலையில், டெல்லி நிதிநிலை அறிக்கை தயாரிப்பை காரணம் காட்டி, ஒருவார காலம் சிசோடியா அவகாசம் கோரியிருந்தார்.
இன்று மீண்டும் விசாரணைக்காக சிசோடியா, சிபிஐ தலைமை அலுவலகம் செல்லவுள்ள நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் இருந்தாலும் கவலைப்பட போவதில்லை எனவும் சிசோடியா தெரிவித்துள்ளார்.