கர்நாடக ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரி, பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மீது மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ரூபா, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோகினி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களையும், தனிப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இருவரும் வலைதளங்களில் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்ததால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் ரூபாவின் செயல் தனக்கும், தனது குடும்பத்திற்கும் மனவேதனை ஏற்படுத்தி உள்ளதால் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என கேட்டு ரோகினி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.