ஜம்மு காஷ்மீரில் வசிப்போருக்கு சொத்து வரி விதிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
துணை நிலை ஆளுநர் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம், யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு ஏப்ரல் மாதம் முதல் சொத்துவரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகளுடன் சொத்து மதிப்பீடு வரி சேகரிப்புக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.