சிவசேனா தலைமைப் பொறுப்பை மும்பையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முறைப்படி ஏற்றுக் கொண்டார்.
அதிகாரப்பூர்வமான கட்சியாக ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தை ஷிண்டே ஆதரவாளர்கள் கைப்பற்றினர் .
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.