உலகத் தரத்திலான ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்புப் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஆண்டுதோறும் புதிதாக 4,500 கிலோ மீட்டருக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.