மகா சிவராத்திரியையொட்டி, நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரியையொட்டி இன்று நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய விழித்திருந்து சிவபெருமானை மக்கள் வழிபடுகின்றனர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஒடிசாவின் புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கேஸ்வர் கோவிலிலும் திரளானோர் வழிபடுகின்றனர்.
உத்தரபிரதேசம் காசி விஸ்வநாதர் கோயிலில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகளுடன், சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.
கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் உள்ள ஆழிமலை சிவன் கோயிலில் பலர் தரிசனம் செய்தனர்.
குஜராத்தின் தரம்பூரில் 31 லட்சம் ருத்ராட்சங்கள் மூலம் உருவாக்கப்பட்ட 31 அடி உயர சிவலிங்கத்தை ஏராளமானோர் தரிசித்தனர்.
மகாசிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர், காஞ்சி ஏகாம்பரேஸ்வர், சிதம்பரம் நடராஜர், நெல்லையப்பர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.